Sunday, February 8, 2026
Your AD Here

சர்வதேச, தேசிய ரீதியாக சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு பெருவிழா.

சர்வதேச , தேசிய ரீதியாக 2025 ஆம் கல்வியாண்டில் இணைப்பாடவிதான போட்டிகளில் பங்குபற்றி கல்முனை கல்வி வலயத்திற்கு  வெற்றிகளைப் பெற்றுத்தந்த சாதனை மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் “GRAND ACHIEVERS’ DAY – 2025 ” பெருவிழா வெள்ளிக்கிழமை ( 26 ) மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில்  நடைபெற்றது.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹுதுல் நஜீம்  தலைமையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ். ஆர். ஹஸந்தி பிரதம அதிதியாக கலந்து கொண்டு சாதனை மாணவர்களை பாராட்டி பரிசில்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், சாதனை மாணவர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவிவ் 160 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கெளரவிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்