Sunday, February 8, 2026
Your AD Here

முஸ்லிம்களைப் பொறுத்த வரை மொட்டு உடன் கொல்லும் விஷம் – திசைகாட்டி மெல்லக் கொல்லும் விஷம் – இம்ரான் எம்.பி

இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்த வரை மொட்டு அரசாங்கம் உடன் கொல்லும் விஷம், என்றால் திசைகாட்டி அரசாங்கம் மெல்லக் கொல்லும் விஷமாகும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

கோத்தாபாய ராஜபக்சவின் தலைமையிலான மொட்டு அரசாங்க காலத்தில் முஸ்லிம்கள் நேரடியாக குறிவைத்து தாக்கப் பட்டனர். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலையிலான திசைகாட்டி ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் மெல்ல மெல்ல குறிவைக்கப் படுகிறார்கள். இதனை இந்நாட்டு முஸ்லிம்கள் கவனத்தில் எடுத்து சிந்திக்க வேண்டும்

கோத்தாபாய நமக்கு செய்த அநியாயங்களை நாம் இன்னும் மறக்க வில்லை. அவை நம்மை நேரடியாக குறிவைத்து செய்யப் பட்டவையாகும்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான திசை காட்டி அரசாங்கம் நம்மை மெல்ல மெல்ல தாக்கி வருகின்றது.

இலங்கையில் இதற்கு முந்திய சகல அமைச்சரவையிலும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருந்தது. இந்த அரசாங்கம் வந்தவுடனேயே அதனை இல்லாமல் செய்தது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்