Sunday, February 8, 2026
Your AD Here

வெளிநாடு வாழ் பணியாளர்கள், குடும்பத்தினருக்கான விசேட மருத்துவ முகாம்.

வெளிநாடு வாழ் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான விசேட மருத்துவ முகாம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று நடைபெற்றது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) அனுசரணையுடன்  சம்மாந்துறை பிரதேசத்தில் வசிக்கும் வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினரும் இம்முகாமில் கலந்து கொண்டனர்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர்  பிரபா சங்கர் ஓழுங்கமைப்படன்   நடைபெற்ற இந்த முகாமில் பயனாளிகளுக்குப் பல்வேறு மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டன.


இதன் போது  பொது வைத்திய பரிசோதனைகள் விசேட மருத்துவ ஆலோசனைகள்  பற்சுகாதாரப் பரிசோதனைகள் என்பன நடைபெற்றதுடன் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நௌசாத் முஸ்தபா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு பிரிவின் பொறுப்பதிகாரி டாக்டர் எம்.சி.எம். மாஹீர், டாக்டர் (திருமதி) எம்.ஐ. நஸீரா, பல் வைத்திய நிபுணர் எம்.எம். பைரூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்