நாவிதன்வெளி பிரதேச சபையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும் புத்தாண்டு வரவேற்பும் கிறிஸ்துமஸ் வாரத்தினை ஒட்டி, 2025 ஆம் ஆண்டின் இறுதி நாளையும் 2026 புத்தாண்டினையும் வரவேற்கும் வகையில் நாவிதன்வெளி பிரதேச சபையில் கோலாகலமான நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
இந்த நிகழ்வுகள் பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் அவர்களின் தலைமையில்
31.12.2025 (புதன்கிழமை) நண்பகல்
நாவிதன்வெளி பிரதேச சபை வளாகத்தில் இடம்பெற்றது.
அருட் சகோதரர்களின் பங்குபற்றுதலுடன், முன்னெப்போதும் இல்லாத வகையில் மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில்
இந்த கிறிஸ்துமஸ்–புத்தாண்டு நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சந்தர்ப்பத்தில், கடந்த கால எதிர்மறை அரசியல் எண்ணங்களை முழுமையாக மறந்து, புதிய மனிதர்களாக புத்தாண்டில் காலடி எடுத்து வைத்து, ஒற்றுமை அரசியலை அடிப்படையாகக் கொண்டு பிரதேசத்தின் வளர்ச்சிக்காக இணைந்து செயற்படுவோம் என தவிசாளர், உப தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உறுதியெடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதேச சபை செயலாளர், அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள்,
சிறுவர்கள் உள்ளிட்ட பலரும்
உற்சாகமாக கலந்து கொண்டு
நிகழ்வை சிறப்பித்தனர்.











