கல்முனை மாநகர சபையில் 2026 புத்தாண்டு கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது அவரால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன் உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாணமும் இடம்பெற்றது. இதையடுத்து ஆணையாளரின் உரை இடம்பெற்றது.
அத்துடன் நாட்டிற்காகவும் கடந்த இயற்கை அனர்த்தங்களினாலும்
உயிர் நீத்தவர்களுக்கும் மாநகர சபையில் சேவையாற்றி மரணித்தவர்களுக்காகவும் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுஇ பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.








