நிந்தவூர் பிரதேச செயலகத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான கடமை நடவடிக்கைகளின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு இன்று(1) இடம்பெற்றது.
நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ. எம். அப்துல் லத்தீப் தலைமையில், சகல உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன்,
பொது மக்களுக்கு வினைத்திறனுடைய, பொறுப்பான மற்றும் பயனுறுதியுள்ள அரச சேவையொன்றை வழங்குதல் என்ற உயரிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒட்டுமொத்த அரச சேவையும் திடசங்கட்பத்துடன் அர்ப்பணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பின்வரும் நிகழ்வுகள் இடம்பெற்றன:
தேசியக் கொடியினை ஏற்றுதல் மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
முப்படைகளின் உறுப்பினர்கள் உட்பட, நாட்டிற்காக தமது உயிர்களை அர்ப்பணித்த சகல வீரர்களையும் நினைவு கூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்
அத்துடன் சகல உத்தியோகத்தர்களாலும் அரச சேவை உறுதிமொழி / சத்தியப் பிரமாணம் சத்தமாக மொழிந்ததுடன் தற்போதைய சவால்களை வெற்றிகொள்ள அறிமுகம் செய்யப்பட்டுள்ள அரச கொள்கைகள் மற்றும் வேலைத் திட்டங்கள், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் அரச ஊழியர்களின் பங்களிப்பு தொடர்பாக,
பிரதேச செயலாளர் ஏ. எம். அப்துல் லத்தீப்பினால் ஊக்கமளிக்கும் தெளிவான உரை வழங்கப்பட்டது.









