அம்பாறை மாவட்டம் மஹாஓய பிரதேச செயலகத்தில் 2026 ஆண்டின் முதல் நாள் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வுகள் இன்று (01.01.2026) பிரதேச செயலாளர் திருமதி குமாரி ஷியாமலி குலதுங்க தலைமையில் சிறப்பாக நடைபெற்றன.
தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசியகீதம் இசைக்கப்பட்டதையடுத்து பௌத்த, இஸ்லாமிய மற்றும் இந்து மத சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்றன.
அதையடுத்து அரசின் கொள்கைப் பிரகடனத்தின்படி சத்தியப்பிரமாண உரை சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் வாசிக்கப்பட, அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் அதற்கொப்ப உறுதியுரை செய்து கொண்டனர்.
பின்னர் பிரதேச செயலாளரால் அரச பணியை முன்னெடுத்தல் பற்றிய காத்திரமானதொரு உரை நிகழ்த்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மஹாஓய பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் அய்மா நிஃமத்துல்லா, கணக்காளர் பி.ஜி.ஏ. துலஞ்சனி, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.கே. வெனரகம, நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம் றாபி, நிர்வாக கிராம உத்தியோகத்தர் கே.பி. மனோஜ் இந்திரஜித், பிரிவுத் தலைவர்கள் உட்பட அலுவலகத்தின் சகல உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.








