Monday, April 6, 2026
Your AD Here

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் “ஸ்மார்ட் பொயின்ட்” டிஜிட்டல் சேவை நிலையம் திறந்து வைப்பு.

அரசாங்கத்தின் டிஜிட்டல் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கமைவாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பொதுமக்களுக்கு விரைவாகவும் வினைத் திறனாகவும் சேவைகளை வழங்கும் நோக்கில் “ஸ்மார்ட் பொயின்ட்” டிஜிடல் சேவை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். எம். ஆசிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம பிரதம அதிதியாக கலந்து கொண்டு இச்சேவை நிலையத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகராஜன், பிரதம கணக்காளர் எம்.எம் மஹ்றூப், பிரதம பொறியியலாளர் ஏ.எம். ஸாஹிர், உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிக்கா, கணக்காளர் ஏ.ஜே. நுஸ்ரத் பானு உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பொதுமக்களுக்கு டிஜிட்டல் சேவை மூலம் பெறப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், வாகன அனுமதிப் பத்திரங்கள் என்பன அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்