Monday, April 6, 2026
Your AD Here

மக்களின் சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் கடுமையான பாதிப்பு.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில் அதிகளவான வடிகான்கள் அசுத்தம் அடைந்து காணப்படுவதுடன், பல நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக் காணப்படுகின்றன.

இந்நிலை மக்களின் சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதை கருத்தில் கொண்டு, இன்று 2026.01.05 சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியினால் இதற்கான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா அவர்களுக்கும், மத்திய சுற்றாடல் அதிகார சபை – கிழக்கு மாகாணத்திற்கும் அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது நம்முடைய ஒவ்வொருவரின் கடமையாகும் என்ற அடிப்படையில் மக்களும், அதிகாரிகளும் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்