காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகம் பெருமையுடன் நடத்தும் சேர்மன் விநாயகமூர்த்தி ஞாபகார்த்த மாபெரும் கடின பந்து T20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி கழகத்தின் தலைவர் தயாபரன் தலைமையில் எதிர்வரும் ஜூலை 28ம் திகதி அன்று பிற்பகல் 1:30 மணியளவில் விபுலானந்த மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சமூக சேவையாளர் (லண்டன்) T. கோகுலராமன் ,முதன்மை அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் S.ஜெகராஜன் அவர்களும் ஓய்வு நிலை பிரதேச செயலாளர் S.இராமகிருஷ்ணன் அவர்களும் ஓய்வு நிலை பொறியியலாளர் K சிவராசா மற்றும் குடும்ப அதிதிகள்,கௌரவ அதிதிகள், நட்சத்திர அதிதிகளும் இவ் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
