சுற்றுலா இந்திய அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
16 பேர் கொண்ட இலங்கை குழாமிற்கு விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அனுமதி வழங்கியுள்ளார்.
அதற்கமைய அணியின் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மற்றும் சுற்றுலா இந்தியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டாவது போட்டி 4 ஆம் திகதியும் மற்றும் மூன்றாவதும் இறுதியுமான போட்டி 7 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.
இந்த மூன்று போட்டிகளும் கொழும் ஆர் பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
இந்திய அணிக்கெதிரான இலங்கை குழாம்
சரித் அசலங்க – தலைவர்
பெத்தும் நிஸ்ஸங்க
அவிஷ்க பெர்ணான்டோ
குசல் மெந்திஸ்
சதீர சமரவிக்கிரம
கமிந்து மெந்திஸ்
ஜனித் லியனகே
நிஷான் மதுஷங்க
வனிந்து ஹசரங்க
துனித் வெல்லாலகே
சாமிக கருணாரத்ன
மஹீஷ் தீக்ஷன
அகில தனஞ்சய
தில்ஷான் மதுசங்க
மதீஷ பத்திரன
அசித பெர்ணான்டோ