இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மெத்யூ மோட் அப் பதவியிலிருந்து விலகியுள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக உள்ள குமார் சங்கக்கார மற்றும் அந்த அணியில் விளையாடும் இங்கிலாந்து அணித்தலைவர் ஜோஷ் பட்லர் இடையே சிறந்த பிணைப்பு உள்ள பின்னணியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவிக்கு குமார் சங்கக்காரவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவிக்காக மேலும் இரு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.இதன்படி, அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மைக்கல் ஹசி மற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் தற்போதைய பயிற்றுவிப்பாளராக இருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஜொனாதன் ட்ரொட் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.