Sunday, September 7, 2025
Your AD Here

திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி இல்ல விளையாட்டு விழா 2024 -சம்பந்தர் இல்லம் சம்பியனானது

அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி பாடசாலையின் 2024 ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டி விழாவின் இறுதி நாள் நிகழ்வு நேற்று பி.ப 3.00 மணியளவில் அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

Akaran news

பாடசாலையின் பிரதி அதிபர் K. ஜெயந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டியின் ஆரம்ப நிகழ்வில் அதிதிகள் மாணவர்களால் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்ட பின்னர், தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்ல கொடிகள் ஏற்றி தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஒலிம்பிக் சுடரேற்றி மாணவர்களின் சத்தியபிரமாண நிகழ்வுடன் மாணவர்களின் அணிவகுப்பு, வெற்றி பெற்ற மாணவர்கள் அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்கள் என்பனவும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

Akaran news

நிகழ்வில் அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப்பணிப்பாளர் க.கமலமோகனதாசன், திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் A.நஷீர், திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக ஆங்கிலத்திற்கான கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் A.M.நௌபார்டீன், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி W.M.S.V.விஜேயதுங்க, பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், கல்வி சாரா உத்தியோகாத்தர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியில் சம்பந்தர் இல்லம் அதிக புள்ளிகளை பெற்று இவ் வருடத்திற்க்கான சம்பியனானது.

Akaran news
Akaran news
Akaran news
Akaran news
Akaran news

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்