ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன, தனது கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
கட்சியின் செயலாளர் வாசுதேவ நாணயக்காரவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார் .
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கலந்துரையாடப்பட்ட இலக்குகள் மற்றும் திட்டங்களை செயற்படுத்துவதில் கட்சியின் ஏனைய சகோதரர்கள் காட்டிய தயக்கமே தாம் இந்த முடிவை எடுக்க வழிவகுத்ததாக நிரோஷன் பிரேமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார் .