பாதாள உலகக் குழுவினரைத் தேடிச் செல்லும்போது, முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சென்று மறைந்திருக்கின்றனர். சில அரசியல்வாதிகள் சத்தமிடுகின்றனர். அவர்களுடைய வீடுகளுக்கும் தேடிச் செல்வார்கள் என்ற சந்தேகம் அவர்களுக்கும் உள்ளது. ஆகையால், முன்னாள் ஜனாதிபதியாக இருந்தாலும் சரி, அமைச்சராக இருந்தாலும் சரி, சட்டம் அனைவருக்கும் சமமானது. சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை. சட்டம் தனது கடமையைச் செய்யும் எனப் பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.
நேற்று (07) ஹட்டனில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
நீண்ட காலமாக இந்த விபத்துகள் இடம்பெற்று வருகின்றன. இதனை மறுக்க முடியாது. நாட்டின் ஒழுக்கம், பேருந்துகளின் தரம், சாரதிகளின் தரம் ஆகியவற்றிற்கு ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும்.
இதனை அமல்படுத்தும்போது பல்வேறு எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி சில தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும். நாங்கள் புதிய பேச்சுவார்த்தைகளுக்கு வந்துள்ளோம்.
பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை விரைவில் மேற்கொள்வோம். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், தரமான பேருந்துகளை அமல்படுத்துவோம். இதுபோன்ற தீர்மானங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டியிருக்கும்.
கடந்த காலங்களில் பாதள குழுவும் அரசியலும் ஒன்றாக இருந்தது ஆகையால் தான் அவர்களுக்கிடையில் மோதல்கள் இடம் பெற்று வருகிறது பாதாள குழு இலங்கையில் மாத்திரமல்ல அது வெளியிலும் இயங்கி வந்தது அனைத்தையும் தேடி பிடித்து விட்டோம் தற்பொழுது ஒவ்வொன்றாக சுத்தப்படுத்தும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகிறோம் நிச்சயமாக பாதாளகுழுவை சுத்தம் செய்வது தான். மீண்டு பாதாளகுழுவை உருவாக இடமளிக்க மாட்டோம் ஊழல் அரசியல் தற்போது இல்லை என தெரிவித்தார்.