நடுவில் உள்ள மூன்று நாட்களும் செல்வசக்தியின் தோற்றமான லட்சுமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அருள்கின்றான்.
இறுதி மூன்று நாட்களும் கல்விசக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.
நவராத்திரி வழிபாட்டு முறை
நவராத்திரி விழாவன்று நவராத்திரி விரதம் எடுப்பவர்கள் அந்த ஒன்பது நாளும் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு விரதத்தினை கடைப்பிடிக்க வேண்டும்.
நவராத்திரி விரதத்தினை எடுப்பவர்கள் திருமணம் ஆன பெண்களை தங்களது வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமர வைத்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் போன்ற பொருள்களை கொடுக்கலாம்.
8-ம் நாளான நவராத்திரி அன்று 2 முதல் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களை அம்மனின் அம்சமாக கருதி பொட்டு, வளையல், உணவு, இனிப்பு மற்றும் ஆடை கொடுத்துகுழந்தைகளை சந்தோஷப்படுத்தலாம்.
சிறப்பு ஒருவர் நவராத்திரியில் தன் வீட்டீலேயே மாபெரும் பிரபஞ்ச சக்தியையும் ஐம்பூத சக்திகளையும் தருவித்து தெய்வீகசக்தியை நிலைப்பெறச் செய்து, ஆனந்தமாக வாழ நினைத்தால் நவராத்திரி பூஜையை மேற்கொள்வது நல்லது.





