Monday, February 9, 2026
Your AD Here

பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன!

இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்நிலையில், அரசியலில் தாம் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

43 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், இந்நிலைமையினால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுத் தனது எதிர்கால வாழ்க்கையை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தாம் இதுவரை எந்தவொரு தேர்தலிலும் தோற்கடிக்கப்படவில்லை எனவும் மஹிந்த யாப்பா அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்