Monday, February 9, 2026
Your AD Here

இதுவரை ஒப்படைக்கப்படாத சம்பந்தனின் கொழும்பு இல்லம் !…

முன்னாள் எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள்
தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட கொழும்பு 7 இல் உள்ள இல்லம் சம்பந்தன் இறந்து சுமார் மூன்று மாதங்கள் கடந்துள்ளபோதிலும் இது
வரை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

2015ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றதன் பின்னர் சம்பந்தனுக்கு இந்த உத்தியோகபூர்வ இல்லம் கிடைத்ததுடன் பின்னர் 2018 ஒக்ரோபர் 26 ஆம் திகதி மகிந்தராஜபக்ஷ பிரதமராக பதவிக்கு வந்தபோது அங்கு தொடர்ந்து
வசிப்பதற்கு வழங்கப்பட்டது.

இந்த வாசஸ்தலத்தை மீண்டும் அரசாங்கம் பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம் அமைச்சு அண்மையில் கையளித்தபோதிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து இந்த தீர்மானம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, பிரதமர்ஹரிணி அமரசூரியவிடம் இதற்கான பத்திரத்தை கையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, 2017 ஆம் ஆண்டு இந்த வீட்டின் பழுது பார்க்கும் பணிக்காக மூன்று
கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதுடன் இல்லத்தின் நீர்க் கட்டணம்,
மின்சாரக் கட்டணம், தொலைபேசி கட்டணம், பராமரிப்புச் செலவுகள் என்பன அரசாங்கத்தினால் ஏற்கப்படுவதாகவும், இந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களின் சம்பளம் அரசாங்கத்தினால்
செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்