Monday, February 9, 2026
Your AD Here

மஸ்கெலியா காட்மோர் நீர்வீழ்ச்சி பகுதியில் ஆணின் சடலம் மீட்பு..!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள காட்மோர் நீர் வீழ்ச்சி பகுதியில் சில நாட்களுக்கு முன் இறந்த ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சடலம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மஸ்கெலியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார கருத்து தெரிவிக்கையில்,

சுமார் நான்கு, ஐந்து தினங்களுக்கு முன் இறந்த நபர் ஒருவரின் சடலம் எனவும் இறந்த நபர் பற்றிய விபரம் தெரியவில்லை

நாளை காலை சம்பவம் இடத்திற்கு நீதிவான் நேரில் வந்து பார்வையிட்ட பின்னர் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்