Monday, February 9, 2026
Your AD Here

சம்மாந்துறையில் கூரிய ஆயுதத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது…!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றையதினம் (23-02-2023) ஞாயிற்றுக்கிழமை இரவு வேளையில் சம்மாந்துறை பெருங்குற்றப்பிரிவு அதிகாரிகளினால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை பெருங்குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, மலையடிக்கிராமம் 01 பகுதியில் வைத்து சென்னல்கிராமம் 02 பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் சான்றுப் பொருள்களுடன் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது, கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான உத்தியோகத்தர் எ.ம். நிரஞ்சன் உள்ளிட்ட அதிகாரிகளினால் இக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்