Monday, February 9, 2026
Your AD Here

இந்தியாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம்!

இந்தியாவில் அசாம் மாநிலத்தின் மோிகான் மாவட்டத்தில் இன்று (27) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆகப் பதிவாகிவுள்ளதுடன், நிலநடுக்கம் ஏற்பட்டதை அந்நாட்டின் தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்று அதிகாலை 2:25 மணிக்கு 16 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக சேதம் அல்லது பாதிப்புகள் ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

முன்னதாகக், கடந்த 25 ஆம் திகதி அதிகாலையில் வங்காள விரிகுடாவில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதற்கு முன்பு டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

சமீப காலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்