Monday, February 9, 2026
Your AD Here

முப்பத்து மூன்று வருடமாக அநீதி இழைக்கப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

முப்பத்து மூன்று வருடமாக அநீதி இழைக்கப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். புதிய அரசாங்கம் இந்த அநீதிக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் பாராளுமன்றில் தெரிவித்தார்.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் விவாதத்திலே கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றும் போது,

மிக முக்கியமாக விடயமாக முப்பத்தி மூன்று வருடமாக அநீதி இழைக்கப்பட்ட ஒன்றுக்காக நாங்கள் பல தடவைகள் இந்த உயரிய சபையிலே பல தடவைகள் பேசி இருக்கின்றோம். புதிய தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து இந்த சபையிலே மூன்று தரம் பேசி இருக்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக இந்த பிரதேச செயலகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி சம்பந்தமாக, மீண்டும் குறிப்பாக கூறலாம் என்று நினைக்கின்றேன்.

இந்த விடயத்துக்கு அமைச்சர் அவர்கள் தகுந்த பதிலையும் நான் பேசிய பின் தரவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.
நான் வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக கேள்வி பதில் நேரத்திலே, விடயத்தை முன்வைத்து கேள்வி கேட்டிருந்தேன்.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் பிரதி அமைச்சர், ருவான் சேனரத் அவர்கள் அதிலே கலந்து கொண்டிருந்தார்.
நான் கேட்ட கேள்விக்கு அவர் பதிலை, வருகின்ற பாராளுமன்றத்திலே தருவேன் என்று சொல்லி இருந்தார். ஆனால் இற்றைவரை தரவில்லை. இருந்தாலும் இந்த விடயத்தை இங்கே இருக்கின்ற அமைச்சர் அவர்களிடம் இந்த உயரிய சபையின் ஊடாக நான் சொல்லலாம் என்று நினைக்கின்றேன்.

வடக்கு பிரதேச செயலகம் என்பது 1989 ஆம் ஆண்டு உப பிரதேச செயலகமாக இருந்தது. அதன் பின் 1993ஆம் ஆண்டு உபகுழுவின் அறிக்கையின் மூலம் 1993 ஒன்பதாம் மாசம் 28ஆம் திகதி அமைச்சரவையின் அனுமதியோடு அது முழு அதிகாரம் கொண்ட ஒரு பிரதேச செயலகமாக அமைக்கப்பட்டிருந்தது.

அமைச்சரவைகளின் அனுமதி பெற்று, பிரதேச செயலகம் முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக இருந்த பொழுதிலும் கூட அதற்குரிய அதிகாரம் மறுக்கப்பட்டிருக்கின்றது. 33 வருட காலமாக ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகளும், அதேபோல் அதிகாரத்தில் உயர் அதிகாரத்தில் இருந்த செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர்கள் போன்றவர்கள், அரசியல்வாதிகளின் நோக்கத்தை அடைவதற்காக அவர்களின் கைக்கூலியாக இருந்து, தரம் உயர்த்தப்பட்ட பிரதேச செயலகத்துக்கு கொடுக்க வேண்டிய அதிகாரத்தை கொடுக்காமல் இருந்தார்கள். இன்று அந்தப் பிரதேச செயலகம் கிட்டத்தட்ட 323 பேருக்கு மேல் ஆளணியை கொண்ட பிரதேச செயலகம் மட்டுமல்ல, 29 கிராம சேவகர் பிரிவை கொண்டது.எஸ்.எல்.ஏ.எஸ். கிளாஸ் வன் ஆக, பிரதேச செயலாளர் இருக்கின்றார். முழு வளங்களும் அந்த பிரதேச செயலகத்திற்கு கொடுக்கப்பட்டி
ருக்கின்றது. ஆனால் 2019 ஆம் ஆண்டு அது பிரதேச செயலகமாக, Home Affairs Ministry இன் அதிகாரபூர்வமான Website யிலே 332 பிரதேச செயலகத்தில், கல்முனை வடக்கு பிரதேச
செயலகமும் ஒன்றாக இருந்தது.ஆனால் பின்பு அது உப பிரதேச செயலகமாக மாற்றப்பட்டது. நான் இந்த இடத்திலே அமைச்சர் அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றேன். அமைச்சரவை அதிகாரம் அளிக்கப்பட்ட ஒரு பிரதேச செயலகம், எப்படி உப பிரதேச செயலகமாக மாற்றப்படும் ? அதற்கான அதிகாரத்தை யார் கொடுத்தது? அமைச்சரவை அமைச்சின் செயலாளருக்கோ, அல்லது அரசாங்க அதிபருக்கோ, அமைச்சரவை பத்திரத்திலே அமைச்சரவை அங்கீகாரம் கொடுக்கப்பட்ட விடயத்திலே மாற்றம் செய்ய முடியுமா? கல்முனை தெற்கு பிரதேச செயலகத்துடன், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை இணைக்க முடியுமா? உப பிரதேச செயலகமாக, அதிகாரம் எப்படி வந்தது? செயலாளருக்கு அதிகாரம் இருக்கின்றதா, அல்லது அரசாங்க அதிபருக்கு அதிகாரம் இருக்கின்றதா, யாருக்கும் அந்த அதிகாரம் இல்லை. அப்படி மாற்ற வேண்டுமென்றால் நீங்கள் மீள ஒரு அமைச்சரவை பத்திரம் போட்டுத்தான் அந்தப் பிரதேச செயலகத்தை நீங்கள் உப பிரதேச செயலகமாக தரமிறக்க முடியும். இன்று 29 கிராம சேவகர் பிரிவு இருக்கின்றது, அதிலே நில அத்துமீறல் நடக்கின்றன. அங்கே பாரிய மோசடி, நில மோசடி நடப்பதற்காக, அது ஒரு உப பிரதேச செயலகமாக காட்டப்பட்டிருக்கின்றது.

ஏன் அமைச்சரவையிலே பொது நிர்வாக உள்நாட்டு அலுவல் அமைச்சரவையிலே இந்த கெபினட் பத்திரம் மறைக்கப்பட்டிருக்கின்றது. அதைக்கூட ஒழித்து இருக்கின்றார்கள். நீங்கள் ஊழலை ஒழிக்க வேண்டும். நியாயத்தை தருவீர்கள், சரியான நிர்வாகத்தை கட்டமைப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. இப்படியான பாரிய மோசடி பல்லாயிரம் கோடி நில மோசடி நடந்து இருக்கிறது. அந்த நிலமோசடி நடப்பதற்காக கடந்த காலத்தில் இருந்த அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல், இருக்கின்ற அமைச்சரவையில் இருந்த உயர் அதிகாரிகளுக்கு கூட லஞ்ச ஊழல் என்பன நடைபெற்றிருக்கின்றது. இதனை நீங்கள் சிறப்பு விஷேட குழுவினாலே, இதனை கண்காணிக்க வேண்டும்.

அமைச்சர் அவர்களே, இப்படியான செயற்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கான அங்கீகாரத்தை தர வேண்டும். சென்ற முறையும் நான் இந்த பாராளுமன்றத்தில், கேள்வி நேரத்திலே கேள்வி கேட்கப்பட்டிருந்தேன். ஆனால் ருவான் சேனாரத்ன அவர்கள், உங்களது அமைச்சர், பிரதி அமைச்சர் அவர்கள், ஆகியோர் ஏற்றுக்கொண்டார்கள். இதிலே பிழை நடந்திருக்கின்றது. அநீதி நடந்திருக்கின்றது, இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த நிர்வாகத்திலே குளறுபடிகள் நடந்திருக்கின்றது என்று ஏற்றுக்கொண்டார், அத்தோடு அவர் வருகின்ற பாராளுமன்றத்தில் அதற்கான பதிலை தருவேன் என்றார். ஆனால் தரவில்லை, இந்த இடத்திலே உங்களிடம் கேட்கின்றேன், நீங்கள் ஒரு குழுவை அமையுங்கள். குழுவை அமைத்து இதற்கான நியாயத்தை தாருங்கள். ஊழலற்ற, நிர்வாக சீர்கேடற்ற ஒரு ஆட்சி முறையை நீங்கள் கொண்டு வர வேண்டும் என்று இருக்கின்றீர்கள். இதனை கருத்திற்கொண்டு இந்த விடயத்தை நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றன.

இந்த விடயத்தின் அடிப்படையிலேயே இதற்கான முழு Document உம் இருக்கின்றது, இந்த சபையின் ஊடாக உங்களுக்கு இந்த document ஐ தருகின்றேன் நீங்கள் இதனைப் பார்த்துவிட்டு இதற்கான ஒரு குழுவை அமைத்து இதற்கான சரியான நீதி நீங்கள் வழங்க வேண்டும். ஏனென்றால் கடந்த காலத்திலே ஆட்சியாளர்களாக இருந்தவர்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதி தொடக்கம் பிரதமர் என தொடர்ச்சியாக ஏமாற்றி இருந்தார்கள். ஏனென்றால் அவர்களுக்கு தங்களது ஆட்சியை நிலை நிறுத்த வேண்டுமென்பதற்காக, ஆட்சி கவிழ்ந்திடும் என்பதற்காக, அவர்கள் இப்படியான போலி வேலைகளை செய்தார்கள். ஆனால், இந்த ஆட்சி 159 ஆசனங்களை கொண்டு இருக்கின்றன. நியாயமான நேர்மையான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள். இந்த விடயங்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று இந்த இடத்திலே கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்