Sunday, February 8, 2026
Your AD Here

அரச மருத்துவ அதிகாரிகளின் போராட்டம் நாளை வரை தொடரும்…

அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பெண் மருத்துவர் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொடங்கிய வேலைநிறுத்த போராட்டம் நாளை (13) காலை 8 மணி வரை தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் சுகத் சுகததாச இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

”இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். குறித்த வேலைநிறுத்தம் நாளை காலை 8 மணிக்கு முடிவடையும். இது போன்ற விடயங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உறுதியாக உள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பாக இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்