கொழும்பு – பிலியந்தலை பிரதேசத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.