Monday, September 8, 2025
Your AD Here

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரக் மேயரை (Eric Meyer) நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இந்நிலையில், எரிக் மேயரின் பெயரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரை செய்து அமெரிக்க செனட் சபைக்கு உறுதிப்படுத்தலுக்காக சமர்ப்பித்துள்ளார்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், சிரேஷ்ட இராஜதந்திர சேவையில் கடமையாற்றும் ஒரு தொழில்சார் அதிகாரி ஆவார். தற்போது எரிக் மேயர், தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் சிரேஷ்ட பணியக அதிகாரியாக செயல்படுகிறார்.

அத்துடன் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, கஸகஸ்தான், கிர்கிஸ்தான், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் அமெரிக்க அரசின் கொள்கை முன்னுரிமைகளை ஒருங்கிணைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறார்.

அண்மையில், எரிக் மேயர், நோர்வேயில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தற்காலிக தூதராகவும், வடமேசிடோனியாவின் ஸ்கோப்பே நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தற்காலிக தூதராகவும், துணை தூதராகவும் பணியாற்றியுள்ளார்.

இதேவேளை, எரிக் மேயர், மத்திய ஆசியாவில் கஸகஸ்தானின் அமெரிக்கத் தூதராக செயற்பட்டு, அமெரிக்க நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், பல நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் பணிகளையும் மேற்கொண்டார்.

வொஷிங்டனில் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் பணியகத்தில் சிறப்பு உதவியாளர் மற்றும் சிரேஷ்ட ஆலோசகராக எரிக் மேயர் பணியாற்றியுள்ளார்.

அத்துடன் கம்போடியாவில் தூதரகத் தலைமை அதிகாரியாகவும், இடைக்கால துணை தூதராகவும் செயல்பட்டுள்ளார். பின்லாந்திலுள்ள அமெரிக்க தூதராகவும் கடமையாற்றிய எரிக் மேயர், ஆர்ஜன்டீனாவின் துணை தூதராகவும், பின்னர் எகிப்தின் கெய்ரோவிலுள்ள பண்பாட்டு விவகார தூதராகவும் பணியாற்றினார்.

வொஷிங்டனில், ஆர்க்டிக் கவுன்சிலின் அமெரிக்கத் தலைவராக எரிக் மேயர் இருந்தபோது கடல்சார், சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான பணியகத்தின் ஆலோசகராகவும் செயற்பட்டுள்ளார்.

அமெரிக்க வெளியுறவு துறைக்குள் இணைவதற்கு முன்னர் எரிக் மேயர், விமானப் போக்குவரத்து துறையில் நிறுவன விற்பனை மற்றும் அரச தொடர்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

எரிக் மேயர், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெர்க்லி வளாகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றுள்ளதுடன் ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றுள்ளார்.

அவருக்கு அமெரிக்க வெளியுறவு துறையிலிருந்து பல உயரிய பாராட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. எரிக் மேயர் டெனிஷ், பிரெஞ்சு, கம்மேர், ரஷ்யன் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளை பேசக்கூடிய ஆற்றலுடையவர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்