இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இத்தாலி அணி தகுதி பெற்றுள்ளது.
சர்வதேச தொடர் ஒன்றுக்காக இத்தாலி கிரிக்கெட் அணி தகுதி பெறும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
நெதர்லாந்தின், ஹேக்கில் நேற்று நடைபெற்ற தகுதி காண் போட்டியில் நெதர்லாந்திடம் இத்தாலி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
எனினும், முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருந்தமையினால் இத்தாலி அணி தகுதி பெற்ற அதேநேரம், போட்டியில் வெற்றிபெற்ற நெதர்லாந்து அணியும் அடுத்த ஆண்டு போட்டிக்காகத் தகுதி பெற்றுள்ளது.