Tuesday, April 7, 2026
Your AD Here

இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க திட்டம்.


தமிழக மாநில அரசின் சிறு துறைமுகங்கள் திணைக்களம் ஊடாக 118 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இராமேஸ்வரம் துறைமுகத்தை சீரமைக்க, 6.24 கோடி ரூபாயில் மத்திய அரசின் ஊடாக பணிகள் நடந்து வருவதாகத் தமிழக செய்திகள் கூறுகின்றன.

இருப்பினும், மத்திய அரசாங்கத்திடம் இருந்து இன்னும் சேவைக்கான அனுமதி கிடைக்கவில்லை.

அதேநேரம், தலைமன்னாரிலும் கப்பல் சேவைக்கான ஆயத்தப்பணிகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் தமிழக அரசு தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

முன்னதாக, தமிழகத்தின் தனுஸ்கோடியில் இருந்து, இலங்கை தலைமன்னார் வரை, 1914 முதல் கப்பல் போக்குவரத்து இடம்பெற்று வந்தது.

எனினும், 1964ஆம் ஆண்டு வீசிய கடுமையான புயல் காரணமாக, தனுஸ்கோடி கடலில் மூழ்கியதால், அந்த சேவை நிறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்