Friday, July 18, 2025
Your AD Here

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. – தவிசாளர்கள் கடும் வாக்குவாதம்.!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கும் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்களுக்கும் இடையில் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது உள்ளூராட்சி சபைகள் முறையாக கழிவகற்றலை மேற்கொள்ளவில்லை எனவும், வீதிகளில் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்நிலையில், கழிவுகள் வீதிகளில் இருக்கின்றன எனப் பொதுவாகக் கூறாமல் எந்தெந்த இடங்களில் கழிவுகள் உள்ளன என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லுமாறு உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள் பதில் வழங்கிய நிலையில் உள்ளூராட்சி சபைகள் ஊழல் பேர்வழிகள் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூறியதால் சபையில் குழப்பம் நிலவியது.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூறிய வார்த்தையை மீளப் பெற வேண்டும் என்று உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள் ஒருமித்து தமது எதிர்ப்புக்களை வெளியிட்டனர்.

இதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. சுமார் ஐந்து நிமிடங்களுக்கு மேல் சபையில் அமைதியின்மை ஏற்பட்ட நிலையில் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அவையை அமைதிப்படுத்தி தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்