Friday, July 18, 2025
Your AD Here

இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியல்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31 திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட நீதவான் இன்று (17) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) மற்றும் இம்மாதம் 1 திகதி அதிகாலை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இரண்டு இந்திய இழுவைப் படகுகளையும் அதிலிருந்து 15 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர். 

பின்னர் குறித்த மீனவர்களையும், இலுவைப் படகுகளையும் கடற்படையினர் தலைமன்னார் கடற் படையினரிடம் ஒப்படைத்தனர். 

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் குறித்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் குறித்த வழக்கு இன்று (17) வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்