மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடும் காற்றுடன் கன மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர் வான் பாய்கின்றது.
இன்று (19) மதியம் முதல் வான் பாய்கின்றது. இதன் காரணமாக தாழ்நிலப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என லக்சபான நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கன மழை காரணமாக ஹட்டன் நகரில் உள்ள குடியிருப்பு மீது பாரிய மண் திட்டு சரிந்து விழுந்துள்ளது. அப் பகுதியில் உள்ள பாதுகாப்புக் கட்டிடம் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்று இரவு வீசிய காற்று காரணமாக நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து தடைப்பட்டாலும் அவ்வப்போது அவை அகற்றப்பட்டு, போக்குவரத்து சீர்செய்யப்பட்டுள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.





