நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் உதைபந்தாட்டத்தில் ஈடுபட்ட இளைஞன் கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச் துயரச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நாவாந்துறை சென் மேரிஸ் வியைாட்டுக்கழக மைதானத்தில் உதைபந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் மீது கோல் கம்பம் வீழ்ந்து ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை எனும் 29 வயதுடைய இளைஞன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.






