Saturday, December 20, 2025
Your AD Here

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இவ்வருடம் 399 யானைகள் பலி.

யானை, மனித மோதல்களால் இவ்வருடத்தின் இன்றைய தினம் வரும் வரை 399 யானைகள் உயிரிழந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை யானைகள் மற்றும் மனித மோதல்களால் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் உயிரிழந்துள்ளதாகவும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இயற்கை காரணங்களுக்காகவும் கணிசமான எண்ணிக்கையிலான காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 74 யானைகளும், மின்சாரம் தாக்கி 47 யானைகளும், ஹக்கபட்டாஸ் பாவனையால் 39 யானைகளும், விஷவாயு தாக்கி 3 யானைகளும், புகையிரத விபத்தில் 19 யானைகளும், வீதி விபத்தில் ஒரு யானையும், விவசாய கிணற்றில் விழுந்து நான்கு

யானைகளும் உயிரிழந்துள்ளன. மற்றும் பல்வேறு சம்பவங்கள் காரணமாக 15 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள இறப்புகள் முதுமை மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்ற இயற்கை காரணங்களால் பதிவாகியுள்ளன .

இதேவேளை, 2022 இல்,அதிகளாவான யானைகள் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளன.இவ்வாண்டில், சுமார் 439 யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்