Tuesday, April 14, 2026
Your AD Here

சம்மாந்துறை பிரதேச சபை ஏற்பாட்டில்வர்த்தக நிறுவன உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வியாபார நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கான  நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையில் விசேட விழிப்புணர்வு செயலமர்வு சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் வெள்ளிக்கிழமை (07)  சம்மாந்துறை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் வழிகாட்டலில் நடைபெற்ற  செயலமர்வின் பிரதான வளவாளராக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரி முஹம்மட் ஸாஜித் ஸமான் அத்துடன் புலனாய்வு அதிகாரிகளான எம்.எம்.எம் பஸ்மீர்,எ.பி.எம் இர்பான்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

 இதன் போது நூகர்வோர் உரிமைகள்,பொறுப்புகள்,சட்டங்கள்,பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க
 வேண்டிய முக்கியமான விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் சம்மந்தமாக வியாபாரிகளுக்கு விளக்கக்காட்சி ஊடாக தெளிவுபடுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்