Tuesday, April 14, 2026
Your AD Here

கல்முனை பிரதேச செயலக பிரிவின் 35 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா.

கல்முனை பிரதேச செயலக பிரிவின் இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வும்  பரிசளிப்பு விழாவும் கல்முனை இளைஞர் கழக சம்மேளன தலைவர் என். எம். அப்ரின்  தலைமையிலும் கல்முனை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எ.எல் .எம். அஸீம் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்களின் பங்களிப்புடன் சனிக்கிழமை (08) சந்தாங்கேணி மைதானத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட பணிப்பாளர் டபிள்யு . கங்கா சாகரிக்கா,அம்பாரை மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உதவி பணிப்பாளர் ஏ.முபாரக் அலி,  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஆர்.எம். சிறிவர்த்தன, கல்முனை பிரதேச செயலக கணக்காளர் அமீர் அலி , பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி. எம் .பளீல் ,டாக்டர் ஜெமீல் ஞாபகர்த்த வைத்தியசாலையின் நிர்வாக உத்தியோகத்தர்கள் வஹாப் ரிஷாட் , றாஜித் , அல் – மிஸ்பாஹ் பாடசாலை அதிபர் அப்துல் றஸாக் ,றீம் 1st உரிமையாளர் ஜவ்ஸான் , அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட தலைவர் அப்துல் மனாப், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய  சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதான  பொலிஸ் பரிசோதகருமான  ஏ.எல்.ஏ. வாஹிட், அமனா தக்காபுல் உத்தியோகத்தர் எம்.ஏ.கரீம் மற்றும் ,ஜெயராஜ்,பிரபாகரன் , அபிவிருத்தி உத்தியோகத்தர் ராசிக் நபாயிஸ் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது இளைஞர் கழக வீரர்களுக்கு சுவட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றி கிண்ணங்கள் என்பன அதிதிகளால் வழங்கி இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்