இலங்கையில் போதைப்பொருட்களுக்கு எதிரான இடைவிடாத முயற்சி தொடர்ந்து பிரமிக்க வைக்கும் முடிவுகளை அளித்து வருகிறது. ஜனவரி 1, 2025 முதல் நவம்பர் 11 வரை அதிகாரிகள் பறிமுதல் செய்த பொருட்கள் பற்றிய விவரங்களை காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. எஃப்.யூ. வூட்லர் வெளியிட்டார்:
1,493 கிலோ ஹெராயின்
15,500 கிலோ கஞ்சா
32.6 கிலோ கொக்கைன்
604 கிலோ ஹஷிஷ்
2,554 கிலோ ஐஸ் (கிரிஸ்டல் மெத்)
40 லட்சம் (4 மில்லியன்) போதை மாத்திரைகள்
அக்டோபர் 31 அன்று முழு நாடும் ஒன்றாக(ரட்டம எகட்ட) என்ற தேசிய பிரச்சாரம் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தக் தீவிர வேட்டை மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. இக்காலகட்டத்தில் கூடுதலாகப் பறிமுதல் செய்யப்பட்டவை:
108 கிலோ ஹெராயின்
268 கிலோ ஐஸ்
388 கிலோ கஞ்சா
4 கிலோ குஷ் (Kush)
23 கிலோ ஹஷிஷ்
4,400 போதை மாத்திரைகள்
போலீசார் இதுவரை 13,490 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர், அவர்களில் 290 பேர் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும், போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சட்டவிரோத சொத்துக்களைக் கண்டறிய 9 விசாரணைகள் நடந்து வருகின்றன.
”உங்களுக்கு நெருக்கமானவர்களை அல்லது அன்புக்குரியவர்களை மறுவாழ்வுக்காக (Rehabilitation) அனுப்ப இதுவே சரியான வாய்ப்பு. உங்கள் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது பிரதேச செயலகத்திற்குச் சென்றால், உங்கள் பிள்ளையை போதைப்பொருள் பிடியிலிருந்து காப்பாற்ற ஒரு பிரத்யேக அதிகாரி உதவக் காத்திருக்கிறார்.” என்று ஏ.எஸ்.பி. வூட்லர் வலியுறுத்தினார்:





