மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (நவம்பர் 21, வெள்ளி) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு அருகில் இந்தக் குறித்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.








