Tuesday, April 14, 2026
Your AD Here

உணர்வுபூர்வமாக மாவீரர் வாரம் அனுஷ்டிப்பு: வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை!

யாழ்ப்பாணம் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் நேற்று உணர்வுபூர்வமாக மாவீரர் வாரம்அனுஷ்டிக்கப்பட்டது.

பிரதேச சபையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் நடந்தேறின. இதன்போது, மானிப்பாய் நகரம் முழுவதும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

சபை அலுவலகம் முன்பாக விசேடமாக அமைக்கப்பட்ட வளாகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து, ஏற்றிய தீபங்களுடன் சபைக்கு வருகை தந்த உறுப்பினர்கள், சபை உள்ளகத்திலும் அஞ்சலி செலுத்தினர்.

சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 28 உறுப்பினர்களில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) சார்பில் இருவரும், தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் ஒருவரும் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. ஏனைய அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்