தொல்லியல் துறையாக இருப்பினும் உள்ளூராட்சி அனுமதி பெற வேண்டும் எனும் வாதத்தினை எதிர்வாதிட முடியாமல் பொலிசார் இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவுகளான 369,410 மற்றும் 417 ஆகியவற்றில் B அறிக்கை தாக்கல் செய்து இருந்தனர்.அது முழுமையாக வழக்கு அறிக்கை தவறு எனவும் சட்டபூர்வமான கடமையை பிரதிவாதி நிறைவேற்றுவதற்காவே செயல்பட்டனர் எனவும் சமர்ப்பணம் வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கில் சந்தேகநபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் அவர்களும் சிரேஷ்ட சட்டத்தரணி விஜயகுமார் செபாஸ்டியன், சட்டத்தரணி அ.நிதான்சன், சட்டத்தரணி சுஜா கந்தசாமி, சட்டத்தரணி மயூரி தர்மதாஸ்,சட்டத்தரணி ரிவான் ஆகியோர் மன்றில் தோன்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது
வாழைச்சேனையில் தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகிய மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் உட்பட ஐவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் உட்பட மூவர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி நாட்டப்பட்ட பெயர் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பிலேயே மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (24) ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஐவரையும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு சரீரப் பிணையில் விடுவிக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன் வாழைச்சேனை பிரதேச சபையின் ஒப்புதலுடன் அறிவிப்புப் பலகையை வைக்க சந்தேக நபர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.





