கரவெட்டிப் பிரதேசசபையின் ஏற்பாட்டில் நெல்லியடி சந்தியில் நேற்று (25) மாலை நடைபெற்ற மாவீரர்களின் நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், வாழைச்சேனை வழக்கு தொடர்பாகத் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என வலியுறுத்தினார்.
நினைவேந்தல் அஞ்சலி மாவீரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மாலை ஆறு மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், மாவீரன் மில்லரின் தாயார் ஈகைச்சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து கரவெட்டிப் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் மலர்தூவி அஞ்சலி செய்தனர். இவர்களுடன் இணைந்து கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், அஞ்சலியின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே வாழைச்சேனை வழக்கு குறித்து இந்த எச்சரிக்கையை விடுத்தார்.










