நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு இன்று (26) முதல் நவம்பர் (30) ஆம் திகதி வரை விஷேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக
கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் முகாமையாளர் கே.ஜெயவதனன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள தொடரான மழை மற்றும் வான் கதவுகள் திறந்ததினால் ஏற்பட்ட வெள்ளை நிலை காரணமாக கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகள் அனைத்தும் இம்மாதம் 30 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





