Sunday, September 7, 2025
Your AD Here

கால்வாயை கடந்து பிரித்தானியா வந்த 300 புலம்பெயர்ந்தோர்! படையினரால் மீட்பு.

பிரித்தானிய எல்லைப்படையினரால் கால்வாயைக் கடந்து வந்த 300 புலம்பெயர்ந்தோர் டோவர் துறைமுகத்தில் சேர்ந்தனர்.

300 புலம்பெயர்ந்தோர்
பிரித்தானியாவிற்கு சமீபத்திய மாதங்களில் வரும் புலம்பெயர்ந்தோர், அதிகாரிகளைத் தவிர்ப்பதற்காக ஆபத்தான பாதைகளை எடுத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரண்டு படகுகளில் வந்த 127 பேர், 21 மைல் பயணத்தை கடந்தனர். அதேபோல் மறுநாள் 41 பேர் ஒரு படகில் வந்தனர்.

இந்த நிலையில் குழந்தை, சிறுவர்கள் உட்பட குறைந்தது 300 புலம்பெயர்ந்தோர் கால்வாயை கடந்து வந்துள்ளனர்.பாரிய நடவடிக்கை
அவர்கள் அனைவரும் பிரித்தானிய எல்லைப் படைக்கப்பல்களால் கால்வாயைக் கடந்து, மீட்கப்பட்ட பின்னர் டோவர் துறைமுகத்திற்கு திங்களன்று வந்தடைந்துள்ளனர்.

இந்த வழியில் இந்த ஆண்டு மட்டும் 14,232 புலம்பெயர்ந்தோர் 283 படகுகளில் வந்துள்ளனர். ஜூலை மாதத்தில் சுமார் 843 பேர் வந்துள்ளனர். சிறிய படகுகளில் கால்வாயைக் கடக்க முற்படும் மக்களை மீட்க, பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய கப்பல்கள் ஒத்துழைக்கும் ஒரு பாரிய நடவடிக்கை அனைத்து நாட்களிலும் நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்