Monday, February 9, 2026
Your AD Here

சாய்ந்தமருது: கனமழை வெள்ளத்தில் கார் மூழ்கியது; குடும்பஸ்தர் உட்பட 3 பேர் பலி!

கல்முனை மாநகர சாய்ந்தமருதுப் பகுதியில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கால்வாய்க்குள் சொகுசு கார் ஒன்று பாய்ந்து விபத்துக்கு உள்ளானதில், அதில் பயணித்த ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமி உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

விபத்து விபரம் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாயல் பின் வீதியில், ஒலிலவேரியன் கிராமத்தில் பாதையை விட்டு விலகிச் சென்ற குறித்த கார், கால்வாயில் பாய்ந்து முற்றாக மூழ்கியது.

கார் நீரில் மூழ்கியிருந்த நிலையில், மீட்புத் தொண்டர்கள், பொலிஸார், சுழியோடிகள் மற்றும் கடற்படையினர் சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாகப் போராடி காரை மீட்டனர்.

காரில் இருந்த மூன்று பேரும் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட போதும், அவர்கள் ஏற்கனவே மரணமடைந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் அறிவித்தன.

இந்தச் சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருதுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்