Monday, February 9, 2026
Your AD Here

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் உணவகத்தை மூடி சீல் வைப்பு !

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் கடந்த சனிக்கிழமை (06.12.2025) கைப்பற்றப்பட்ட தரமற்ற மற்றும் பாவனைக்கு ஒவ்வாத உணவுகள் தொடர்பான வழக்கு, இன்று (09.12.2025) சம்மாந்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

​உணவுப் பாதுகாப்பு மற்றும் பொதுச்சுகாதாரத்தைப் பேணும் விதமாக, கெளரவ நீதிமன்றம் உணவக உரிமையாளருக்கு 48,000/- அபராதம் விதித்ததுடன் எதிர்வரும் 19.12.2025 வரை உணவகத்தை மூடி, அனைத்துத் திருத்த வேலைகளையும் சுகாதார விதிமுறைகளுக்கு அமையச் செய்ய தீர்ப்பை வழங்கியுள்ளது:

​​நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் பிரகாரம்,சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் குழுவினர், இன்று சம்பந்தப்பட்ட உணவகத்தை முறையாக மூடி (சீல் வைத்து) தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்