பெண் மருத்துவரிடம் 48 மணி நேரம் டிஜிட்டல் கைது என்ற பெயரில் விசாரணை நடத்திய மோசடி கும்பல், 59 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பணத்தை தங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்ப வைத்துள்ளனர்.
நொய்டாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரை ‘டிஜிட்டல் கைது’ என் ஏமாற்றி, அவரிடம் இருந்து 59 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலம் ஹைடெக் மோசடி கும்கும்பல் அபகரித்துள்ளது.
டெல்லி அருகே உள்ள நெய்டா 77-வது செக்டாரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு கடந்த 13-ம்தேதி செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தன்னை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி என அறிமுகம் செய்துள்ளார். “மருத்துவரே உங்கள் செல்போனில் இருந்து ஆபாச வீடியோக்கள் பரப்பப்பட்டுள்ளன.இதற்காக உங்களிடம் விசாரணை நடத்துகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர் மறுக்க, அவரை சமாதானம் செய்த குறித்த நபர், இது விசாரணைதான் காணொளியில் இணையுங்கள் என்று கூறி உள்ளார். அவர் காணொளியில் இணைந்ததும் ‘உங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம், டிஜிட்டல் கைது நடவடிக்கை எடுத்துள்ளோம், வீட்டை விட்டு வெளியேறக்கூடாது’ என மிரட்டி உள்ளார்.
இந்த நிலையில் குறித்த நபர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தார். இவ்வாறு 48 மணி நேரம் அவரிடம் மிரட்டி விசாரணை நடத்திய அந்நபர், ஒரு வங்கி கணக்கை அனுப்பி அதில் 59 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் அனுப்பும்படி கூறி உள்ளார். அதன்படி பணம் அனுப்பி உள்ளார். பின்னர் அந்த நபர் விசாரணை முடிந்ததாக கூறி தொடர்பை துண்டித்துள்ளார்.
இதனையடுத்து ஆன்லைன் மோசடி நபர்களால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருத்துவர் , கடந்த 22-ம் தேதி நொநொய்டா 36-வது செக்டாரில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிஜிட்டல் கைது என்ற பெயரில் மோசடி சமோசடி செய்த கும்பலை தேடி வருகின்றனர். மேலும் அவர்களின் வங்கி கணக்கை வைத்து அடையாளம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் கிரைம் பிரிவு உதவி கமிஷனர்விவேக் ரஞ்சன் ராய் தெரிவித்துள்ளார்.
(source of தினத்தந்தி )