பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான விருந்தகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.
குறித்த தீ விபத்தில் இந்தோனேசிய பிரஜை உட்பட 24 பேர் உயிரிழந்ததாகத் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.பங்களாதேஷில் தொடர்ந்தும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள்மீது போராட்டக்காரர்கள் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.