Sunday, September 7, 2025
Your AD Here

AI அதிநவீன ஏவுகணையை அறிமுகப்படுத்தியது ஈரான்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட AI மூலம் இயக்கப்படும் அதிநவீன ஏவுகணையை ஏவுகணையை ஈரான் விமானப் படை அறிமுகப்படுத்தியுள்ளது .

அந்த நாட்டில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவா் இஸ்மாயில் ஹனீயே படுகொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போா் பதற்றம் புதிய உச்சத்தில் இருக்கும் சூழலில் இந்த ஏவுகணை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து இராணுவ தலைமை தளபதி ஹுசைன் சலாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அபு மஹதி ஏவுகணை தற்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. 1,000 கி.மீ. வரை சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட இந்த ஏவுகணை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயக்கப்படும்.

தற்போதைய உலகில் சரணடைய வேண்டும், அல்லது நம்மை நாமே பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என இரு நிலைப்பாடுகள் மட்டுமே உள்ளன. இரண்டும் இடைப்பட்ட நிலைப்பாடு இருக்கமுடியாது. எனவே இரண்டாவது நிலைப்பாட்டை எடுத்துள்ள ஈரானுக்கு இந்த ஏவுகணை இன்னும் பலம் சோ்க்கும் என்று அவா் தெரிவித்துள்ளார் .

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்