27வ ஆகஸ்ட் 2024 செவ்வாய்கிழமை
1)மேஷம்:-
சிலருடன் வாக்குவாதம் செய்து மன வேதனை அடைவீர்கள். என்றாலும் ஆதாயமான சில விஷயங்களும் நடந்தேறும்.
2)ரிஷபம் :-
சுப காரியங்களை செய்ய திட்டமிடுவீர்கள். பெரிய மனிதர்கள் தொடர்பும் அவர்களால் சில காரியங்களில் முன்னேற்றமும் உண்டாகும்.
3)மிதுனம்:-
சுபச் செலவுகளை சந்திக்க நேரலாம். நண்பர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.
4)கடகம்:-
போக்குவரத்துக்களால் அனுகூலம் ஏற்படும். சிலரிடம் கொடுத்த வாக்கை காப்பாற்ற தீவிர முயற்சி எடுப்பீர்கள்.
5)சிம்மம்:-
இளைய சகோதரர் உங்கள் மனம் போல் நடந்து கொள்வார். மனதிற்கு பிடித்தமான சிலரின் சந்திப்பு நிகழலாம்.
6)கன்னி:-
உறவினர்கள் உங்களுக்கு உதவி செய்ய காத்திருப்பர். அரசு தொடர்பான காரியங்களில் அலைச்சலை சந்திக்க நேரிடும்.
7)துலாம்:-
ஓய்வெடுக்க நினைத்தாலும் அதற்கு முடியாத அளவுக்கு வேலைப்பழு கூடும். சாமர்த்தியமான பேச்சால் குடும்பத்தில் சிக்கல்கள் வராமல் காத்துக் கொள்வீர்கள்.
8)விருச்சிகம்:-
பண உதவிகளை பெற மேற்கொண்ட முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகத்தர்கள் தங்கள் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.
9)தனுசு:-
பயணங்கள் வெற்றி பெறும். வீண் விரயங்களை குறைத்து கையிருப்பை அதிகப்படுத்த முற்படுவீர்கள்.
10)மகரம்:-
சொத்து விற்பனை முயற்சிகளில் முன்னேற்றம் உண்டு. பண வரவுகளால் பொருளாதார நிலை முன்னேற்றம் ஏற்படும்.
11)கும்பம்:-
உத்தியோகத்தர்கள் உயர் அதிகாரிகளின் சொல்படி கூடுதல் பொறுப்புக்களை ஏற்கும் படி ஆகலாம். பணம் சம்பந்தப்பட்ட பொறுப்பில் உள்ளவர்கள் கவனமாக செயல்படுங்கள்.
12)மீனம்:-
பொது வாழ்வில் உள்ளவர்கள் பொறுமையை கடைப்பிடித்து எல்லோரிடமும் சுமூகமாக பழகுவது நல்லது.