05 செப்டம்பர் 2024 வியாழக்கிழமை
1)மேஷம்:-
அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் பேச்சை குறைத்து பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது சொந்த தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த சில முயற்சிகளை செய்வார்கள்.
2)ரிஷபம் :-
தொலைபேசி மூலம் வந்த செய்தியால் அவசியமான காரியம் ஒன்று முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அலுவலகம் சம்பந்தமாக வெளியூர் பயணத்தை மேற்கொள்வார்.
3)மிதுனம்:-
அலுவலகத்தின் மூலமாக கேட்டிருந்த கடன் தொகை கிடைத்து பாதியில் விட்டு போயிருந்த பணிகளை தொடருவீர்கள்.
4)கடகம்:-
உத்தியோகத்தில் உள்ள சிலருக்கு பதவி உயர்வுடன் வெளியிடங்களுக்கு மாற்றம் ஏற்படக்கூடும். சொந்தத் தொழில் நல்ல வருமானம் காணப்படும்.
5)சிம்மம்:-
சொந்தத் தொழிலில் எடுத்த வேலையை பாதியில் நிறுத்தி மற்றொருவரின் பணியை செய்து தர வேண்டிய நிலை ஏற்படலாம்.
6)கன்னி:-
அவசியமான வேலையை உடனே செய்து முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பணம் வரவு கைக்கு கிடைத்து பாதியில் விட்டிருந்த பணியை தொடங்குவீர்கள்.
7)துலாம்:-
காலை நேரம் பார்த்து கடமைகளில் கருத்தாக இருப்பது கடைசியில் வெற்றி தரும். சொந்த தொழில் செய்பவர்கள் சுமாரான வருமானத்தை பெறும் சூழ்நிலையே உண்டு.
8)விருச்சிகம்:-
புதிய வாடிக்கையாளர் ஒருவர் பண விஷயங்களில் சரியாக நடந்து கொள்ளாததால் மனவருத்தம் ஏற்படும். கூட்டுத் தொழிலில் கூட்டாளிகளின் பேச்சும் செயலும் மனதுக்கு கவலை தரும்.
9)தனுசு:-
அலுவலகப் பணியில் இருந்து வந்த மந்தமான நிலை மாறும். சொந்த தொழிலில் உழைப்புக்கேற்ற வருமானம் வந்து சேரும்.
10)மகரம்:-
உயர் அதிகாரியின் உத்தரவுப்படி ஒரு காரியத்தை உடனடியாக செய்ய வேண்டியது இருக்கும். சொந்தத் தொழிலில் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்லாவிட்டால் பிரச்சினைகள் ஏற்படும்.
11)கும்பம்:-
அலுவலகத்தில் பனி சுமை கூடும். சிலருக்கு பதவி உயர்வோடு இடமாறுதல் கிடைக்கலாம். சொந்தத் தொழிலில் வாடிக்கையாளர்களுடன் சுமூகமாக நடந்து கொள்ளுங்கள்.
12)மீனம்:-
உத்தியோகத்தர்கள் அலுவலகப் பணிகளில் ஆர்வத்தோடு ஈடுபட்டு உயர் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள்.