07 செப்டம்பர் 2024 சனிக்கிழமை
1)மேஷம்:-
சதுர்த்தி விரதம் விநாயகர் வழிபாடு செய்க. குடும்பத்தில் அவ்வப்போது சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறும்.
2)ரிஷபம் :-
சதுர்த்தி விரதம் விநாயகர் வழிபாடு செய்க. கூட்டுத் தொழில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் பணவரவிற்கு குறைவு இருக்காது.
3)மிதுனம்:-
சதுர்த்தி விரதம் விநாயகர் வழிபாடு செய்க. குடும்பத்தில் சுபகாரியங்கள் சிறு தடங்கலுக்கு பின் சிறப்பாக நடைபெறும். கலைஞர்கள் வாழ்வில் புதிய திருப்பம் உண்டாகும்.
4)கடகம்:-
சதுர்த்தி விரதம் விநாயகர் வழிபாடு செய்க. எதிர்கால முன்னேற்றத்திற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். குடும்பத்தில் பணவரவு அதிகமாகும்.
5)சிம்மம்:-
சதுர்த்தி விரதம் விநாயகர் வழிபாடு செய்க. குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். கலைஞர்கள் புதிய வாய்ப்பினைப் பெற்றாலும் எதிர்பார்க்கும் வருமானம் இருக்காது.
6)கன்னி:-
சதுர்த்தி விரதம் விநாயகர் வழிபாடு செய்க. சொந்த தொழிலில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளின் ஆலோசனைகளுக்கு மதிப்பளிப்பது அவசியம்.
7)துலாம்:-
சதுர்த்தி விரதம் விநாயகர் வழிபாடு செய்க. பணிகளில் அதிக கவனம் செலுத்தினால் லாபம் பெருகும். குடும்பத்தில் புதிய கடன் வாங்கி பழைய கடனை தீர்க்கும் நிலை ஏற்படும்.
8)விருச்சிகம்:-
சதுர்த்தி விரதம் விநாயகர் வழிபாடு செய்க. கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு பணவரவு தாமதமாகலாம். சுப காரிய நிகழ்ச்சி நடைபெற முயற்சி மேற்கொள்வீர்கள்.
9)தனுசு:-
சதுர்த்தி விரதம் விநாயகர் வழிபாடு செய்க. உங்கள் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சி நடைபெற கூடும்.
10)மகரம்:-
சதுர்த்தி விரதம் விநாயகர் வழிபாடு செய்க. கூட்டுத்தொழில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவற்றை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள் .
11)கும்பம்:-
சதுர்த்தி விரதம் விநாயகர் வழிபாடு செய்க. தடை தாமதங்களால் முக்கியமான காரியங்களில் பின்னடைவு வரலாம். கலைஞர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவர்.
12)மீனம்:-
சதுர்த்தி விரதம் விநாயகர் வழிபாடு செய்க. பங்குச்சந்தையில் நல்ல லாபம் கிடைக்க அன்றாட நிலவரங்களை கண்காணிப்பது அவசியம். குடும்பத்தில் பணவரவு அதிகரிக்கும்.