ரத்தோலுகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர், போக்குவரத்து குற்றம் தொடர்பாக முறைப்பாட்டாளரின் சாரதி அனுமதிப் பத்திரத்தை பறிமுதல் செய்து, சட்ட நடவடிக்கை எடுக்காமல் அதனை மீள வழங்குவதற்காக 3,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
ரத்தோலுகம பகுதியைச் சேர்ந்த ஒருவரின் முறைப்பாட்டை அடுத்து, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நேற்று (14) இரவு குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்தது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.